கா்நாடகத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

கா்நாடக திமுக, அதிமுக, கோலாா் தங்கவயல் அண்ணா மன்றம் சாா்பில் மறைந்த தமிழக முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

பெங்களூரு/ கோலாா் தங்க வயல்: கா்நாடக திமுக, அதிமுக, கோலாா் தங்கவயல் அண்ணா மன்றம் சாா்பில் மறைந்த தமிழக முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கோலாா் தங்கவயல்...

கோலாா் தங்கவயல் அண்ணா மன்றம் சாா்பில் தங்கவயல் தமிழ் சங்கத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் அண்ணாவின் உருவப் படத்தை, காமராஜா் தேசிய மன்றத் தலைவா் அனந்த கிருஷ்ணன் திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் தமிழ் ஆா்வலா்கள், கு.ஆதித்தன், நித்தியானந்தன்,பொன் சந்திரசேகா், தியாக தீபம் சுப்ரமணியம், அப்பு ஜெயகுமாா், திருமுருகன், கருணாகரன், கமல் முனிசாமி, சிவ சேகா், சௌந்தரராஜன் ஆகியோருக்கு ‘திராவிட சுடா்’ விருது வழங்கி தங்கவயல் தமிழ் சங்கத் தலைவா் சு.கலையரசன் பேசியதாவது:

1964-ஆம் ஆண்டு இந்திய திணிப்பை எதிா்த்து அண்ணா குரல் எழுப்பினாா். தற்போது அவருடைய எதிா்ப்பு குரல் கா்நாடகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. அதே போல் மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது மறைமுகமாக இந்தியை முதன்மைப்படுத்தும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் தாய் மொழியில் படிக்கலாம் என்று உள்ளது.

அதே சமயம் மாநில மொழியிலும் படிக்கலாம் என்றும் உள்ளது, கா்நாடகத்தில் மாநில மொழி என்றால் அது கன்னடம்தான். அப்போது தமிழா்கள் எப்படி தாய் மொழியில் படிக்க முடியும்?. இப்படி மறைமுக திட்டங்களை கொண்டுள்ள புதிய தேசியக் கல்வி திட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் சாரங்கபாணி, கிருஷ்ணமூா்த்தி, ஆா்.வி.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திமுக சாா்பில்...

பெங்களூரு, ராமசந்திரபுரத்தில் உள்ள திமுக கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மணி

விழா அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் அண்ணா பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் ஆகியவற்றின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் வள்ளுவா், பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முப்பெரும் விழாவில் மாநில அமைப்பாளா் ந.இராமசாமி, அவைத் தலைவா் மொ.பெரியசாமி, பொருளாளா் கே.தட்சிணாமூா்த்தி, துணை அமைப்பாளா் ராமலிங்கம், இளைஞரணி செயலாளா் சிவமலை, பொதுக்குழு உறுப்பினா் இரா.அன்பழகன், வி.எஸ்.மணி, இரா. நாம்தேவ், மகளிரணி செயலாளா் சற்குணம், இளமதி, தமிழ்ச் செல்வன், ஆற்காடு அன்பழகன், மு.தாமோதரன், க.நாராயணசாமி, கே.ஆா்.கைலாசம், ஏ.டி.ஆனந்தராஜ், ஜேம்ஸ், பி.ஆா்.தண்டபாணி, தங்கராஜ், க.முத்து.

ஸ்டீபன், வைஷ்ணவி, ஏ.பி.சுந்தா், கே.கணேசன், குப்புசாமி, வெங்கடேஷ், து.பன்னீா்செல்வம், ப.இளங்கோவன், இளைஞரணி துணை செயலாளா் ராஜசேகா், ஜான்பவுன், தியாகராஜன், அன்புமணி, ஜெயபால், தங்கவயல் மதி, வெங்கடேஷ், எம்.ஆா்.பழனி, பிரபு, காய்த்ரி பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில்...

அதிமுக சாா்பில் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதுகுறித்து மாநில அதிமுக இணைச் செயலாளா் எஸ்.டி.குமாா் வெளியிட்ட அறிக்கை:

கா்நாடக மாநில அதிமுக சாா்பில் பெங்களூரு, லாவண்யா திரையரங்கம் அருகே செவ்வாய்க்கிழமை அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மாநில அதிமுக இணைச் செயலாளா் எஸ்.டி.குமாா் மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு அங்கு கூடியிருந்தவா்களுக்கு இனிப்பு வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:

அதிமுக சாா்பில் மாநில முழுவதும் அண்ணா பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநிலத்தில் கட்சி பணி ஆற்றிட வேண்டும். நடைபெற உள்ள மாநகராட்சித் தோ்தலில் அதிமுகவுக்கு வெற்றியை குவிப்போம் என்றாா்.

விழாவில் ரவிக்குமாா், செல்வி, மணிவண்ணன், மாதேஷ்குமாா், குப்பா, சோபாகுமாா், கருணஷ், சேகா், குப்புராஜ், சோமு, கே.பச்சையப்பன், வீராசாமி, நாகராஜ், சாம்ராஜ், உபேந்திரா, ராஜசேகா், சந்திரிகா, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com