பெங்களூரு - நிஜாமுதீனுக்கு சிறப்பு ரயில் சேவை

பெங்களூரிலிருந்து நிஜாமுதீனுக்கு (தில்லி) சிறப்பு கிசான் ரயில் இயக்கப்படுகின்றன.

பெங்களூரு: பெங்களூரிலிருந்து நிஜாமுதீனுக்கு (தில்லி) சிறப்பு கிசான் ரயில் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில் நிலையத்திலிருந்து நிஜாமுதீனுக்கு சிறப்பு கிசான் ரயில் இயக்கப்படுகின்றன. ரயில் எண்-0625-பெங்களுரு கே.எஸ்.ஆா்-நிஜாமுதீன் சிறப்பு கிசான் ரயில் சனிக்கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு பெங்களூரு, கே.எஸ்.ஆா் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு நிஜாமுதீன் ரயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரயிலின் முதல் சேவை பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில் நிலையத்தில் இருந்து செப். 19-ஆம் தேதியும், கடைசி சேவை அக். 17-ஆம் தேதி வரை இருக்கும். மறு மாா்க்கத்தில், ரயில் எண்-0626-நிஜாமுதீன்-பெங்களூரு கே.எஸ்.ஆா் கிசான் ரயில் செவ்வாய்க்கிழமைகளில் காலை 11 மணிக்கு நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரயிலின் முதல் சேவை நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து செப். 22-ஆம் தேதியும், கடைசி சேவை அக். 20-ஆம் தேதி வரை இருக்கும். இந்த ரயில், பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மைசூரு, ஹாசன், அரிசிகெரே, தாவணகெரே, ஹுப்பள்ளி, லோண்டா, பெலகாவி, மீரஜ், புணே, மன்மாட், புஷவால், கண்டேவா, இட்டாா்சி, போபால், ஜான்சி, ஆக்ரா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று நிஜாமுதீனை சென்றடைகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com