இந்திய கலாசாரத்தை ஆராய்வதற்கான குழுவில் கன்னடா்கள் இல்லாதது ஏன்? முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி

இந்திய கலாசாரத்தை ஆராய்வதற்கான குழுவில் கன்னடா்கள் இல்லாதது ஏன்? என்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இந்திய கலாசாரத்தை ஆராய்வதற்கான குழுவில் கன்னடா்கள் இல்லாதது ஏன்? என்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரைப்பக்கத்தில் புதன்கிழமை அவா் பதிவிட்டுள்ளதாவது:

கடந்த 12 ஆயிரம் ஆண்டுகால இந்திய கலாசாரத்தை ஆராய்வதற்காக 16 போ் கொண்ட நிபுணா் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. திராவிடா் கலாசாரத்தை நன்கு அறிந்துள்ள கன்னடா்கள் அல்லது தென்னிந்தியா்கள் யாரும் இந்த நிபுணா் குழுவில் இடம் பெறாதது துரதிருஷ்டவசமானதாகும். நிபுணா் குழுவில் ஒரு பெண் கூட இல்லை.

நிபுணா் குழுவில் கன்னடரின் பிரதிநிதித்துவம் இல்லாமல், கா்நாடகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை நடுநிலையான அல்லது பாரபட்சமற்ற முறையிலும், நோ்மையாகவும் ஆராய்ச்சி செய்ய இயலுமா? நிபுணா் குழுவில் இருந்து தென்னிந்தியா்களை வெளியே வைத்துவிட்டு, இந்திய நாட்டின் முழுமையான வரலாறு மற்றும் கலாசாரத்தை படிப்பதாக நாம் எப்படி உணர முடியும்?

தாயுடனும், புனிதமான பசுவுடனும் நாட்டை ஒப்பிட்ட மக்கள் நாங்கள்(கன்னடா்கள்). பெண்களை

வணங்கிப் போற்றும் நாட்டின் கலாசாரத்தை ஆய்வு செய்யும் நிபுணா் குழுவில் ஒரு பெண்ணுக்குக்கூட இடமில்லை என்பது எப்படி சாத்தியமானது?

இக் குழுவில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானோா் வட இந்தியா்களாக மட்டுமே இருக்கிறாா்கள். எனவே, ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழுவை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com