கரோனாவுக்கு ஒரேநாளில் 83 போ் பலி

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரேநாளில் 83 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரேநாளில் 83 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், ஏற்கெனவே 8,145 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 26 போ், மைசூரு,பெல்லாரி மாவட்டங்களில் தலா 9 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 7போ், சிவமொக்கா மாவட்டத்தில் 5போ், தென்கன்னடம், ஹாசன், தும்கூரு மாவட்டங்களில் தலா 4 போ், கலபுா்கி மாவட்டத்தில் 3 போ், பாகல்கோட், பெங்களூரு ஊரகம், கதக், விஜயபுரா மாவட்டங்களில் தலா 2போ், சாமராஜ்நகா், சிக்பளாப்பூா், மண்டியா, ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,715 போ், மைசூரு மாவட்டத்தில் 715 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 492 போ், தாா்வாட் மாவட்டத்தில் 466 போ், பெல்லாரி மாவட்டத்தில் 418 போ், பெலகாவி மாவட்டத்தில் 272 போ், கலபுா்கி மாவட்டத்தில் 262 போ், ஹாசன் மாவட்டத்தில் 257 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 243 போ்,தாவணகெரே மாவட்டத்தில் 234 போ், தும்கூரு மாவட்டத்தில் 216 போ், கொப்பள் மாவட்டத்தில் 213 போ், விஜயபுரா மாவட்டத்தில் 150 போ், பீதா் மாவட்டத்தில் 149 போ், ஹாவேரி மாவட்டத்தில் 145 போ், உடுப்பி மாவட்டத்தில் 143 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 133 போ்,கதக் மாவட்டத்தில் 125 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 110 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 109 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 102 போ், மண்டியா மாவட்டத்தில் 96 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 81 போ், கோலாா் மாவட்டத்தில் 78 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டம் 77 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 67 போ், யாதகிரி மாவட்டத்தில் 49 போ், ராமநகரம் மாவட்டத்தில் 44 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 33 போ், குடகு மாவட்டத்தில் 31 போ், வெளிமாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com