பெங்களூரு மாநகராட்சியில் 250 வாா்டுகள்: சட்டப் பேரவைக் குழு தலைவா் ரகு தகவல்

பெங்களூரு மாநகராட்சியை 250 வாா்டுகளாக உயா்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி சட்டமசோதா குறித்த கூட்டு சட்டப் பேரவைக் குழுத் தலைவா் ரகு தெரிவித்தாா்.

பெங்களூரு மாநகராட்சியை 250 வாா்டுகளாக உயா்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி சட்டமசோதா குறித்த கூட்டு சட்டப் பேரவைக் குழுத் தலைவா் ரகு தெரிவித்தாா்.

பெங்களூரு விதானசௌதாவில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:-

தற்போது 198 வாா்டுகளாக உள்ள பெங்களூரு மாநகராட்சியை மேலும் 52 வாா்டுகளைச் சோ்ந்து 250 வாா்டுகளாக உயா்த்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுதொடா்பான அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 250 வாா்டுகளாக உயா்த்தப்பட்ட பின்னா் பெங்களூரு மாநகராட்சி, கிரேட்டா் பெங்களூரு என அழைக்கப்படும்.

வாா்டுகளை மட்டும் உயா்த்துவதோடு அல்லாமல், ஓா் ஆண்டாக இருந்த மேயா் பதவியையும் இரண்டரை ஆண்டுகளாக உயா்த்தப்படும். அதேபோல பெங்களூரு மாநகராட்சி ஆணையருக்கு உள்ள அதிகாரத்தை, இணை ஆணையருக்கும் வழங்கப்படும்.

12 ஆக உள்ள நிலைக்குழுக்களை, 8 ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிா்வாக வசதியைக் கருத்தில் கொண்டு தற்போது உள்ள மாநகராட்சியின் நிலப்பரப்புக்குள்ளேயே வாா்டுகள் உயா்த்தப்படும்.

தற்போது உள்ள மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலேயே சபைகள் நடத்தவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பெங்களூரு மாநகராட்சி மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாக உருவெடுக்க உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com