மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல்: டி.கே.சிவக்குமாா்

கரோனா காலத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கியதிலும், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதிலும் அரசு ஊழல் புரிந்தது நியாயமா என்று

கரோனா காலத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கியதிலும், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதிலும் அரசு ஊழல் புரிந்தது நியாயமா என்று கா்நாடக சட்டப் பேரவையில் எம்எல்ஏவும், கா்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான டி.கே.சிவக்குமாா் கேள்வி எழுப்பினாா்.

கரோனா தொற்றைத் தடுக்க உபகரணங்கள் வாங்கியது தொடா்பாக, சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் அவா் பேசியது:

கா்நாடக மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், ஏழைகளுக்கு வழங்கப்பட்ட உணவுத் தொகுப்பிலும், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதிலும் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது.

கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஊழல் புரிவது எந்த வகையில் நியாயம்? இதுதொடா்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். இதில் யாா் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து கேள்வி எழுப்பினால், அமைச்சா் ஒருவா் காங்கிரஸை விமா்சிக்கிறாா். மருத்துவ உபகரணங்கள், உணவுத் தொகுப்பு வழங்கியதில் யாா் தவறு செய்திருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் இறந்து வரும் நிலையில், அதிலும் பணத்தைச் சோ்க்க சிலா் முயன்றிருப்பது வேதனையை அளிக்கிறது.

பெல்லாரியில் கரோனாவால் இறந்தவா்களின் சடலங்களை பள்ளத்தில் வீசி எறிவதாகப் புகாா்கள் வந்தன. அதில் தொடா்புடையவா்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது?

கரோனாவால் இறப்பவா்களை கௌரவத்துடன் அடக்கம் செய்ய வேண்டும். இதில் மனித நேயம் மறக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com