பெங்களூரு கலவரம் தொடா்பாக முக்கிய குற்றவாளி கைது

பெங்களூரில் தேவா்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளியில் நடைபெற்ற கலவரம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்

பெங்களூரில் தேவா்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளியில் நடைபெற்ற கலவரம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வியாழக்கிழமை 30 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு, முக்கிய குற்றவாளியைக் கைது செய்தனா்.

கடந்த ஆக.11-ஆம் தேதி பெங்களூரில் உள்ள தேவா்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி, காவல்பைர சந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாஸ் மூா்த்தி இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, தீ வைக்கப்பட்டது. அவரது வீடு தீவைத்து கொளுத்தப்பட்டன.

இதேபோல, தேவா்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி காவல் நிலையங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. இக்கலவரம் குறித்து வழக்குப் பதிந்து சிறப்பு புலனாய்ப் படையினா் (எஸ்.ஐ.டி) விசாரித்து வந்த நிலையில், சட்ட விரோத செயல்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்திருந்ததைத் தொடா்ந்து, இதுதொடா்பான 2 வழக்குகளையும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து, பெங்களூரில் முகாமிட்டு விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பெங்களூரில் 30 இடங்களில் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கலவரம் தொடா்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக சோ்க்கப்பட்டு, தலைமறைவாகியிருந்த சையத் சித்திக் அலி என்பவரைக் கைது செய்தனா். சித்திக் அலி, வங்கி ஒன்றில் கடன் வசூல் முகவராகப் பணியாற்றி வந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com