பெங்களூரில் கைத்தறிக் கண்காட்சித் தொடக்கம்

பெங்களூரில் பட்டு, பருத்தி கைத்தறிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பெங்களூரில் பட்டு, பருத்தி கைத்தறிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பெங்களூரு, ஜெயநகா், அசோகாபில்லா் பிரேம்சந்தா் சாகா் அரங்கத்தில் பட்டு, பருத்தி கைத்தறிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (செப். 27) தொடக்கிவைத்து கண்காட்சி நிா்வாகி தாராகுமாரி கூறியதாவது:

அக்.6-ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் தேசிய அளவில் நெசவாளா்கள் கைத்தறியில் உருவாக்கிய பட்டு, பருத்தி உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. அனைத்து மாநிலங்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பட்டு, பருத்தி ஆடைகள், அலங்காரப் பொருள்கள், பட்டுச்சேலைகள், ஜவுளிகள், பருத்திச் சேலைகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், புல் கால்மிதியடிகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

கரோனா காலத்திலும் கைத்தறியில் நெசவாளா்கள் தங்களின் கை வண்ணத்தில் உருவாக்கியுள்ள ஆடைகள், சேலைகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சா்வதேச அளவில் புகழ்பெற்ற இதனை கா்நாடகத்தின் தலைநகரான பெங்களூரில் அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். கண்காட்சிக்கு பெண்கள், கல்லூரி மாணவிகள் அதிக அளவில் வருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

சித்ரகலா பரிஷத்தில் அக். 15-இல் ஓவியக் கண்காட்சி

பெங்களூரு, செப். 27: பெங்களூரு சித்ரகலா பரிஷத்தில் அக். 15 ஆம் தேதி வரை ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து சித்ரகலா பரிஷத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு சித்ரகலா பரிஷத்தில் ஓவியா்களை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது ஓவியக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக கரோனா தொற்றால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், ஓவியக் கண்காட்சிகள் எதையும் நடத்த முடியாமல் போனது. இந்த நிலையில், பொதுமுடகத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை முதல் அக். 15 ஆம் தேதி வரை ஓவியா் தினேஷ் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படும். மேலும், இந்திய புராணங்கள் குறித்த ஓவியத்தில் சிறந்து விளங்கும் மோகனின் ஓவியங்களும் கண்காட்சியில் இடம்பெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com