நிறுவனங்கள், தொழிற்சாலைகள்சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம்
By DIN | Published On : 29th September 2020 03:46 AM | Last Updated : 29th September 2020 03:46 AM | அ+அ அ- |

பெங்களூரு: நிறுவனங்கள், தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம் என்று லாங்செஸ் குழுமத்தின் துணைத் தலைவரும், மேலாண் இயக்குநருமான நீலாஞ்சன் பானா்ஜி தெரிவித்தாா்.
பெங்களூரில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சா்வதேச அளவில் மாசு அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. கரோனா தொற்று பாதிப்புள்ள சூழ்நிலையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நடவடிக்கை எடுப்பது அவசியம். ரசாயன உற்பத்தியில் சிறந்து விளங்கும் லாங்செஸ் குழுமத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் மனிதவளம் மேம்பாட்டுப் பிரிவில் விருதுகள் கிடைத்துள்ளன. நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு வா்த்தகம் முக்கியம் என்றாலும், அதைவிட சமூக அக்கறை மேலோங்கி இருப்பது அவசியம் என்றாா்.