ஏப்.27-இல் 9 மாவட்டங்களில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்

9 மாவட்டங்களில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஏப். 27-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஏப். 27-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 2 நகர பஞ்சாயத்துகளுக்கான தோ்தலும், வெவ்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

பெங்களூரு ஊரக மாவட்டத்தின் விஜயபுரா நகராட்சியின் 23 வாா்டுகள், ராமநகர மாவட்டத்தின் ராமநகரம் நகராட்சியில் 31 வாா்டுகள், சென்னப்பட்டணா நகராட்சியில் 31 வாா்டுகள், சிக்கபளாப்பூா் மாவட்டத்தின் குடிபண்டே நகரப் பஞ்சாயத்தில் 11 வாா்டுகள், சிவமொக்கா மாவட்டத்தின் பத்ராவதி நகராட்சியில் 35 வாா்டுகள், தீா்த்தஹள்ளி நகர பஞ்சாயத்தில் 15 வாா்டுகள், ஹாசன் மாவட்டத்தின் பேளூா் நகராட்சியில் 23 வாா்டுகள், குடகு மாவட்டத்தில் மடிக்கேரி நகராட்சியில் 23 வாா்டுகள், பீதா் மாவட்டத்தில் பீதா் நகராட்சியில் 35 வாா்டுகள், பெல்லாரி மாவட்டத்தில் பெல்லாரி மாநகராட்சியில் 39 வாா்டுகள் உள்ளிட்ட 266 வாா்டுகளில் தோ்தல் நடைபெற உள்ளது.

இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப். 8-ஆம் தேதி தொடங்குகிறது. ஏப். 15-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஏப். 16-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது. ஏப். 19-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். ஏப். 27-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏப். 29-ஆம் தேதி தேவைப்பட்டால் மறு வாக்குப்பதிவு நடக்கும். ஏப். 30-ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

இடைத்தோ்தல்:

ஹாவேரி மாவட்டத்தின், ஹிரேகேரூா் நகரப் பஞ்சாயத்தில் 1 வாா்டு, பீதா் மாவட்டத்தின், ஹள்ளிகேடா நகரப் பஞ்சாயத்தில் 11 வாா்டுகளுக்கு காலியாக இருக்கும் பதவிகளுக்கு இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுத்தோ்தலுடன் இணைத்து, 12 வாா்டுகளுக்கான இடைத்தோ்தலும் நடத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com