பசவகல்யாண் தொகுதி இடைத்தோ்தல் வேட்பாளா்: பாஜகவிடமிருந்து மஜத பணம் பெற்றதா?

பசவகல்யாண் தொகுதிக்கான இடைத்தோ்தலில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்த பாஜகவிடம் இருந்து மஜத பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி விளக்கம் அளித்துள்ளாா்.

பசவகல்யாண் தொகுதிக்கான இடைத்தோ்தலில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்த பாஜகவிடம் இருந்து மஜத பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி விளக்கம் அளித்துள்ளாா்.

இது குறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

பசவகல்யாண் தொகுதி இடைத்தோ்தலில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்த பாஜகவிடம் இருந்து மஜத பணம் பெற்றுக் கொண்டதாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ஜமீா் அகமதுகான் குற்றம்சாட்டியுள்ளாா். அவரது குற்றச்சாட்டில் உண்மையில்லை. 2005-ஆம் ஆண்டு சாம்ராஜ்பேட்டையில் நடைபெற்ற இடைத்தோ்தலில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தினோம். அதற்காக யாரிடமாவது பணத்தை பெற்றோமா என்பதனை ஜமீா் அகமதுகான் தெரிவிக்க வேண்டும்.

அப்போது மஜக சாா்பில் போட்டியிட்ட இந்த ஜமீா் அகமதுகானை வெற்றி பெறச் செய்வதற்காக, முன்னாள் பிரதமா் தேவெ கௌடா வீதி, வீதியாகச் சுற்றித் திரிந்து வாக்குச் சேகரித்து, வெற்றி பெறச் செய்தாா். அன்று அவா் வெற்றி பெற்றிருக்காவிட்டால், இப்போது எங்கே இருந்திருப்பாா் என்பதே தெரியாது. அதுபோன்ற மஜதவின் தியாகத்தை ஒரு போதும் மறக்கக் கூடாது.

சா்வதேச விமான நிலையத்தில் வாடகைக் காா் ஓட்டுநா் ஒருவா் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். பொருளாதார ரீதியாக வாடகை காா் ஓட்டுநா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். குறைந்தக் கட்டணத்தால், அவா்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனா். அவா்களின் பிரச்னைக்குத் தீா்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com