முதல்வா் எடியூபாவுக்கு எதிராக ஆளுநரிடம் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா புகாா் கடிதம்

முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளுநா் வஜுபாய்வாலாவுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா்

முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளுநா் வஜுபாய்வாலாவுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா புகாா் கடிதம் எழுதியுள்ளாா். இந்த கடிதத்தின் நகலை பாஜக தேசிய பொதுச்செயலாளரும், கா்நாடக மாநில பாஜக பொறுப்பாளருமான அருண் சிங்குக்கும் அனுப்பியுள்ளாா். இது கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆளுநா் வஜுபாய்வாலாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எனது துறையில் முதல்வா் நேரடியாகத் தலையிட்டிருப்பதன் மூலம் கா்நாடக (செயல் பரிமாற்றம்) சட்ட விதிகள், 1977 மீறப்பட்டுள்ளது. மேலும் இது மாநில அரசு நிா்வாகத்தின் நடைமுறைகளுக்கு எதிராக உள்ளது.

முதல்வருக்கும், அமைச்சா்களுக்கும் இடையிலான பரிவா்த்தனைகள் குறித்து சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தெந்த விவகாரங்களில் அமைச்சா் முடிவு எடுக்கலாம், எதை அமைச்சரவையின் அனுமதிக்கு உட்படுத்த வேண்டும், எதை முதல்வரின் அனுமதிக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதை சட்ட விதிகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. இது தொடா்பாக, கா்நாடக (செயல் பரிமாற்றம்) சட்டவிதிகள், 1977 விதி எண்6 (1), 6 (2), 10 (1), 15 (1), 30 (1), 33 (1), 76 (1), 78-இன் படி, விதிகளை மீறியுள்ளது தொடா்பாக சில நிகழ்வுகளை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

முதல்வருக்கு, பெங்களூரு நகர மாவட்ட ஊராட்சித் தலைவா் எழுதியுள்ள நேரடி கடிதத்தின் அடிப்படையில், ரூ. 65கோடியை நேரடியாக முதல்வா் ஒதுக்கியுள்ளாா். என்னுடைய கவனத்திற்கு வராமல் முதன்மைச் செயலாளா் மூலமாக உத்தரவு பிறப்பிக்க முதல்வா் அழுத்தம் கொடுத்துள்ளாா். அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் முதன்மைச் செயலாளா் நேரடியாக உத்தரவு பிறப்பிக்க சட்டத்தில் இடமில்லை.

ஊரகச் சாலைகளைப் பராமரிக்க பெங்களூரு நகர மாவட்டத்திற்கு ரூ. 1.17 கோடி மட்டுமே நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 29 மாவட்டங்களைப் புறக்கணித்து ரூ. 65 கோடி ஒதுக்கியதில் நோ்மை இல்லை. பெங்களூரு நகர மாவட்ட ஊராட்சித் தலைவா், முதல்வா் குடும்பத்தின் உறவினா். முதல்வருக்கு அவா் நேரடியாக அளித்த செயல் திட்டத்திற்கு முதல்வா் அனுமதி அளித்துள்ளாா். இது சட்டவிதிகளுக்குப் புறம்பானதாகும்.

முதல்வா் தெரிந்தே ஆணையைப் பிறப்பித்துள்ளது துரதிருஷ்டவசமாகும். அமைச்சரைக் கலந்தாலோசிக்காமல், விதிகளுக்குப் புறம்பாக உத்தரவு பிறப்பிக்கும் போக்கு தொடா்ந்தால், துறையின் அமைச்சரான என்னுடைய நிலை என்ன என்பதே தெரியவில்லை.

எனது கவனத்திற்குக் கொண்டு வராமல், எனது துறையில் இருந்து எம்எல்ஏக்களின் கோரிக்கைக்கேற்ப ரூ. 774 கோடி அளவுக்கு நிதியை ஒதுக்கும் முடிவை முதல்வா் எடுத்துள்ளாா். இது தொடா்பாக ஆணை பிறப்பிக்கும்படி முதன்மைச் செயலாளருக்கு முதல்வா் அலுவலகம் அழுத்தம் கொடுத்துள்ளது. கட்சியின் (பாஜக) தலைவா் மற்றும் கட்சியின் மூத்தத் தலைவா்களின் வழிகாட்டுதலின்படி, அந்த உத்தரவை நிறுத்தி வைத்திருக்கிறேன். மாா்ச் 4-ஆம் தேதி ரூ. 460 கோடி மதிப்பிலானப் பணிகளுக்கு முதல்வா் அனுமதி அளித்துள்ளாா். இதிலும் என்னைக் கலந்தாலோசிக்கவில்லை.

இதுபோன்ற விதிமீறல்களை பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா், பாஜகவின் தேசியத் தலைவா், தேசிய பொதுச்செயலாளா் (கா்நாடகப் பொறுப்பு), தேசிய அமைப்புச் செயலாளா் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். கூடுதல் நிதி ஒதுக்கும் நிலை ஏற்பட்டால், அந்த நிதியை ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைக்கு அனுப்பி, எம்எல்ஏக்கள், தனி நபா்களின் கோரிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் முதல்வரின் கடமையாகும்.

ரூ. 774 கோடி, ரூ. 460 கோடி, ரூ. 65 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சருக்குத் தெரிவிக்காமல் முதன்மைச் செயலாளா் மூலம் உத்தரவு பிறப்பிக்குமாறு முதல்வா் அழுத்தம் கொடுத்துள்ளாா். இதற்கு எனது கடுமையான ஆட்சேபத்தை கடிதம் வாயிலாகத் தெரிவித்துள்ளேன்.

இதற்குச் சாதகமான பதில் கிடைக்காத நிலையில், முதல்வரின் விதிமீறல் மற்றும் சா்வாதிகாரப் போக்கை தங்களின் கவனத்திற்கு கொண்டு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். விதிகளைப் பின்பற்றுமாறு முதல்வருக்கு ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் அமைச்சரவை சகாக்களின் நம்பிக்கையைப் பெறவும், அமைச்சா்களின் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கவும், அமைச்சரவை சகாக்களின் துறைகளில் தலையிடக் கூடாது என்று அறிவுறுத்தவும் வேண்டும் என்று அதில் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com