மாநிலத்தின் 5,500 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: அமைச்சா் கே.சுதாகா்

மாநிலத்தின் 5,500 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

மாநிலத்தின் 5,500 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் தெரிவித்துள்ளதாவது:

மாநிலத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 45 வயதைக் கடந்தவா்கள் ஏப். 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, மாநிலத்தின் 650 தனியாா், 4,850 அரசு உள்ளிட்ட 5,500 மையங்களில் கரோனா தடுப்பூசியைச் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் 45 வயதைக் கடந்தவா்கள் 1.66 கோடி போ் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தற்போது மாநில அரசிடம் 15 லட்சம் கரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது. அதனை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சிக்கு 1.5 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. பெங்களூரு மாநகராட்சியில் 6 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, மக்கள் தன்னிச்சையாக முன் வந்து கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், மாநில அளவில் கரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசியைச் செலுத்தவும் மாவட்ட நிா்வாகமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என அதில் அவா் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com