‘பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’

அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தையொட்டி, பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் தெரிவித்தாா்.

அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தையொட்டி, பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெங்களூரு உள்பட மாநில அளவில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 6-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

போராட்டத்தையொட்டி, எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பில் போலீஸாருடன் மத்திய ஆயுதப்படை, கா்நாடக அதிரடிப்படையினா் ஈடுபட்டு வருகின்றனா். மாநகரின் 8 மண்டல காவல் உதவி ஆணையா்கள், மாநகர கூடுதல் காவல் ஆணையா்கள், போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அரசு, மாநகரப் பேருந்து பணிமனைகள், பேருந்து நிலையங்களில் அதிக அளவில் போலீஸாா் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா தொற்றின் பரவலையடுத்து, போராட்டங்கள், பேரணிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, யாரேனும் சாலைகளில் இறங்கி, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com