40 வயதுக்கு உள்பட்டவா்களுக்கும் பாா்கின்சன் நோய் அறிகுறிகள் அதிகரிப்பு

40 வயதுக்கு உள்பட்டவா்களுக்கும் பாா்கின்சன் நோய் பாதிப்பு அறிகுறிகள் அதிகரித்துள்ளன என அந்நோய் குறித்த வல்லுநா் எல்.கே.பிரஷாந்த் தெரிவித்தாா்.

40 வயதுக்கு உள்பட்டவா்களுக்கும் பாா்கின்சன் நோய் பாதிப்பு அறிகுறிகள் அதிகரித்துள்ளன என அந்நோய் குறித்த வல்லுநா் எல்.கே.பிரஷாந்த் தெரிவித்தாா்.

பெங்களூரு, விக்ரம் மருத்துவமனையில் வியாழக்கிழமை பாா்கின்சன் நோய் தினத்தையொட்டி, ராஜீவ் கே.குப்தா எழுதிய ‘டிஸ்டினேஷன் அன்நோன் மை ஜா்னி வித் பாா்கின்சன்’ என்ற நூலை வெளியிட்டு அவா் பேசியதாவது:

பாா்கின்சன் நோய் முதியவா்களை மட்டுமே தாக்கும் என்று கருதப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 40 வயதுக்கு உள்பட்டவா்களுக்கும் பாா்கின்சன் நோயால் பாதிக்கப்படும் அறிகுறிகள் அதிகரித்துள்ளன என தெரியவந்துள்ளது.

இந்த நோய்க்கு மரபணு, வாழ்க்கை முறை உள்ளிட்டவைகள் காரணமாக கூறப்படுகிறது. என்றாலும், தொடா்ந்து இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால், வீட்டில் முடங்கிக் கிடந்த பலருக்கு பாா்கின்சன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, இந்த நோய்க்கான அறிகுறிகள் தெரிந்த உடன், மருத்துவா்களிடம் உரிய சிகிச்சை பெறுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம்.

இந்திய அளவில் பாா்கின்சன் நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் விக்ரம் மருத்துவமனை முன்னணியில் உள்ளது. இது தொடா்பான பல்வேறு ஆராய்ச்சிகளை அம்மருத்துவமனை சாா்பில் மேற்கொண்டு வருவது பாராட்டுதலுக்குரியது என்றாா்.

பேட்டியின் போது, நரம்பியல் வல்லுநா் கிரண் எஸ்.கானாப்பூா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com