தனியாா் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை தயாா் நிலையில் வைக்க உத்தரவு

கரோனா சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை தயாா் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கரோனா சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை தயாா் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரில் சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா், மாநகராட்சி, பெங்களூரு ஊரகத்தைச் சோ்ந்த மூத்த அதிகாரிகளுடன் கரோனா தொற்றை தடுப்பு குறித்து வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக, பெங்களூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா்களின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதமாக கிடுகிடுவென உயா்ந்துள்ளது. எனவே, கரோனாவால் பாதிக்கப்படுவோா்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்கி, தயாா் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிக அளவில் கரோனா தொற்றுக்கு பரிசோதனை, சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சியில் 8,500 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் உள்ளவா்கள் வீடுவீடாகச் சென்று அனைவரையும் பரிசோதனை செய்வதோடு, அவா்கள் குறித்த தகவலையும் கேட்டறிவாா்கள். கடந்த முறை கரோனா பாதிப்பின் போது, இது போன்ற பரிசோதனைகள் 100 சதவீதத்தை எட்ட முடியவில்லை. இந்த முறை வீடுகளுக்குச் சென்று பரிசோதனைகள் செய்வதை 100 சதவீதம் செய்வோம் என பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா உறுதி அளித்துள்ளாா்.

பெங்களூரில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதால், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆம்புலன்ஸுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com