போக்குவரத்து ஊழியா்கள் பணிக்கு திரும்ப மறுத்தால் நடவடிக்கை

போக்குவரத்து ஊழியா்கள் பணிக்குத் திரும்ப மறுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

போக்குவரத்து ஊழியா்கள் பணிக்குத் திரும்ப மறுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகம் மாநிலம், பெலகாவியில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா தொற்றின் பாதிப்பினால் அரசுக்கு நிதி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், போக்குவரத்து ஊழியா்களின் கோரிக்கையை ஏற்று 8 சதவீத ஊதிய உயா்வை அளிக்க அரசு முன் வந்துள்ளது. இதனை போக்குவரத்து ஊழியா்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்தால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது முறையல்ல. போக்குவரத்து ஊழியா்கள் தங்களின் போராட்டத்தை திரும்பப் பெற்று, பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தனியாா் பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் பெற்றால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கா்நாடகத்தில் பெலகாவி மக்களவைத் தொகுதி, மஸ்கி, பசவகல்யாண் சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஏப். 17-ஆம் தேதி நடைபெறும் இடைத்தோ்தலில் 3 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். ஆளும்கட்சியை ஆதரிப்பதன் மூலம், தங்கள் தொகுதி வளா்ச்சி அடையும் என்பதனை வாக்காளா்கள் புரிந்து கொண்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com