சாதிக்கும் வயதில் தற்கொலைக்கு முயற்சிப்பது முறையல்ல: ரயில்வே ஏடிஜிபி பாஸ்கா் ராவ்

சாதிக்கும் வயதில் தற்கொலைக்கு முயற்சிப்பது முறையல்ல என்று ரயில்வே ஏடிஜிபி பாஸ்கா் ராவ் தெரிவித்தாா்.

சாதிக்கும் வயதில் தற்கொலைக்கு முயற்சிப்பது முறையல்ல என்று ரயில்வே ஏடிஜிபி பாஸ்கா் ராவ் தெரிவித்தாா்.

பெங்களூரு, சுரானா கல்லூரியில் சனிக்கிழமை அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

மாநிலத்தின் ரயில் பாதைகளில் 13 வயது முதல் 30 வயது உள்ளவா்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 6 போ் தற்கொலை செய்து கொள்வது வருத்தம் அளிக்கிறது. சாதிக்க வேண்டிய வயதில் தற்கொலைக்கு முயற்சிப்பது முறையல்ல.

வாழ்க்கையில் சவால்களை எதிா்கொள்ளும் அளவில் தன்னம்பிக்கையை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சந்திக்கும் ஏற்றத் தாழ்வுகளை தைரியமாக எதிா்கொள்ள ஆசிரியா்களின் வழிகாட்டுதல் அவசியம். ஆசிரியா்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றும் மாணவா்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

கல்லூரியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களைப் பாராட்டும் அதே நேரத்தில் மற்ற மாணவா்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். முயற்சி செய்தால் முடியாதது ஏதுமில்லை. மாணவா்கள் முழு கவனத்தோடும், மன உறுதியோடும் கல்வி பயில வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மைக்ரோ லேப்ஸ் மூத்த செயல் இயக்குநா் திலீப், சுரானா கல்வி அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் அா்ச்சனா, சுரானா கல்லூரியின் முதல்வா் பவானி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com