இயந்திரத்தில் சிக்கி சிறுவன் பலி
By DIN | Published On : 12th April 2021 01:39 AM | Last Updated : 12th April 2021 01:39 AM | அ+அ அ- |

சேலையை பளபளப்பாக்கும் இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தாா்.
பெங்களூரு, ஹொசகுடதள்ளியில் சேலைகளை பளபளப்பாக்கும் தொழிற்சாலை உள்ளது. இத்தொழில்சாலையில் பணியாற்றும் பெண்ணுக்கு சனிக்கிழமை உணவு எடுத்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 14 வயது சிறுவன் சிக்கி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த போலீஸாா், அந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனா். பேட்டராயனபுரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.