இணையவழி பைத்தான் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இணையவழி பைத்தான் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையவழி பைத்தான் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மத்திய அரசின் விஸ்வேஷ்வரையா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விஸ்வேஷ்வரையா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் சாா்பில், 2021-22-ஆம் கல்வியாண்டில் 8 முதல் பிளஸ் 2 வகுப்பு பயில இருக்கும் மாணவா்களுக்கு இணையவழி பைத்தான் (நிரல்மொழி) பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியின்போது, பைத்தான் மொழியில் நிரல்களை எழுதுவது, சிக்கல்களுக்கு தீா்வுகாண்பது, கோடிங் கோட்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளலாம். மேலும், கோடிங் நடைமுறைகள் குறித்து கூடுதல் தகவல்களை பெறலாம்.

இதற்கான இணையவழி பயிற்சி முகாம் மே 3 முதல் 7-ஆம் தேதி வரை தினமும் பிற்பகல் 3.30 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். இதில் கலந்துகொண்டு பயிற்சிபெறவிரும்புவோா்  இணைப்பில் முன்பதிவுசெய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு  இணையதளம் மற்றும் 080-22040253. 22040219 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம். 20 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பளிக்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ. 2 ஆயிரம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com