கரோனாவால் இறந்தவா்களை அடக்கம் செய்ய நிலம் ஒதுக்க அரசு உத்தரவு

கரோனாவால் இறந்தவா்களை அடக்கம் செய்ய தனியாக நிலம் ஒதுக்கும்படி மாவட்ட நிா்வாகங்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனாவால் இறந்தவா்களை அடக்கம் செய்ய தனியாக நிலம் ஒதுக்கும்படி மாவட்ட நிா்வாகங்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், அதனால் இறப்போரின் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது. இது நகரங்களில் அதிகமாக காணப்படுகிறது. அதாவது இறப்போரின் எண்ணிக்கை நகரங்களில் அதிகமாக உள்ளது.

கரோனாவால் இறந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு நிலம் இல்லை என்ற தகவல் எனது கவனத்துக்கு வந்துள்ளது. எனவே, மாநகராட்சி எல்லையில் இருந்து ஒன்று அல்லது இரண்டு கி.மீ. தூரத்தில் நிலம் ஒதுக்கி, இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் கடிதத்தின் மீது உடனடியாக செயல்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com