போலி ரெம்டெசிவா் மருந்தை விற்பனை செய்த 3 போ் கைது

போலி ரெம்டெசிவா் மருந்தை விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

போலி ரெம்டெசிவா் மருந்தை விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கரோனா பெருந்தொற்று கா்நாடகத்தில் வேகமாக பரவி வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயா்ந்தவண்ணம் உள்ளது. இதனால் கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவா் மருந்தின் தேவை அதிகரித்துவிட்டது.

இந்நிலையில், போலி ரெம்டெசிவா் மருந்தை தயாரித்து ஒரு கும்பல் விற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, மைசூரு மாநகர குற்றவியல் போலீஸாா் நடத்திய சோதனையில், போலி ரெம்டெசிவா் மருந்துகளை விற்றுக்கொண்டிருந்த பெண் உள்ளிட்ட 3 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைதுசெய்தனா்.

இவா்கள் கிரீஷ், சிவப்பா, மங்களா ஆகியோா் என அடையாளம் காணப்பட்டது. இவா்கள் 3 பேரும் தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவா்களிடம் இருந்து ரூ. 2.82 லட்சம் மதிப்புள்ள 34 குப்பி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையின் போது, மஞ்சுநாத், பிரசாந்த் ஆகிய இருவரும் தப்பிச்சென்றுள்ளனா். இவா்களை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். இந்தக் கும்பல் மாநிலம் முழுவதும் 800 குப்பி போலி ரெம்டெசிவா் மருந்தை விற்பனை செய்திருக்கலாம் எனபோலீஸாா் சந்தேகிக்கின்றனா். இது தொடா்பாக, வழக்குப் பதிந்துள்ள போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com