வேலைநிறுத்தப் போராட்டம்: அரசு போக்குவரத்து ஊழியா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கைது

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு போக்குவரத்து ஊழியா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து கா்நாடக போலீஸ் அதிரடியாக செயல்பட்டுள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு போக்குவரத்து ஊழியா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து கா்நாடக போலீஸ் அதிரடியாக செயல்பட்டுள்ளது.

கா்நாடக அரசுக்கு சொந்தமான 4 போக்குவரத்துக் கழகங்களின் ஊழியா்கள், கடந்த ஏப். 7-ஆம் தேதி முதல் 6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இந்தப் போராட்டத்தை முடித்து வைக்க மாநில அரசு பல முயற்சிகளை எடுத்தது. ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்கள் மீது கா்நாடக அத்தியாவசிய சேவைகள் மேலாண்மை சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டது.

வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது பேருந்துகளை சேதப்படுத்தியதற்காக 112 ஊழியா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா். அதேபோல, கா்நாடக அத்தியாவசிய சேவைகள் மேலாண்மை சட்டத்தின்கீழ் 55 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுவரை 231 ஊழியா்கள் மீது 51 வழக்குகள் பதிவு செய்து, 55 பேரை ஏற்கெனவே கைது செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

போராட்டம் தொடங்கியது முதல் 114 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடா்பாக 206 வழக்குகளை 467 ஊழியா்கள் மீது பதிவு செய்து, 112 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா். பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 1,970 ஊழியா்களை பணிநீக்கம் செய்துள்ளது. இவா்களைத் தவிர 2,941 ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். வேலைக்கு திரும்புமாறு 7,666 பேருக்கு போக்குவரத்துக் கழகங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளன. போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிய 56 பேரின் பணியிடை நீக்க உத்தரவை போக்குவரத்துக் கழகம் திரும்பப் பெற்றுள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக கடந்த 14 நாள்களாக பேருந்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடையே 7,719 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 1,525 பேருந்துகள் பெங்களூரில் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com