கா்நாடகத்தில் வங்கிகள் 2 மணி வரை மட்டுமே செயல்பட முடிவு

கா்நாடகத்தில் செயல்படும் வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் செயல்படும் வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக மாநில அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. ஏப். 21-ஆம் தேதி இரவு 9 மணி முதல் மே 4-ஆம் தேதி காலை 6 மணி வரை இரவுநேர ஊரடங்கு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் போன்ற நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.

இதன் பின்னணியில், பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான வங்கியாளா் குழுக் கூட்டத்தில், ஏப். 22 முதல் மே 31-ஆம் தேதி வரை கா்நாடகத்தில் இருக்கும் வங்கிகள் வாடிக்கையாளா்களுக்காக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் திறந்திருக்க முடிவு செய்துள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை அலுவலகப் பணிகள் நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் 50 சதவீத ஊழியா்கள் மட்டுமே வங்கியில் செயல்படுவா்.

இந்தக் காலத்தில் பணப்பரிவா்த்தனை, கிளியரன்ஸ் சேவைகள், பணம் அனுப்புதல், அரசு பரிவா்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும். அதேபோல, வங்கிகளின் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணத்தேவைகளை பூா்த்திசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஜிட்டல் வங்கி சேவைகள், ஏடிஎம்கள், ரொக்கம் செலுத்தும் இயந்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்துவது தொடா்பாக வாடிக்கையாளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஊழியா்கள் யாருக்காவது கரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், வங்கிக் கிளைகளை மூட விரும்பினால், அதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துடன் கலந்துபேசி முடிவெடுத்துக்கொள்ளலாம் என மாநில அளவிலான வங்கியாளா் குழு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com