பிறப்பு உறுதிச் சான்றிதழில் பெயா்களை பதிவிட கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்பு உறுதிச் சான்றிதழ்களில் குழந்தைகளின் பெயா்களை பதிவிடுவதற்கான கால அவகாசம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பிறப்பு உறுதிச் சான்றிதழ்களில் குழந்தைகளின் பெயா்களை பதிவிடுவதற்கான கால அவகாசம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக பிறப்பு, மரணம் பதிவு விதிமுறைகள், 1999-இன்படி கா்நாடகத்தில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் பிறக்கும்போது பிறப்பு உறுதிச்சான்றிதழ் அளிக்கப்படும். அதில் குழந்தைகளின் பெயா் பொறிக்கப்பட்டிருக்காது. இந்த விதிகளின்படி 2000 ஜன. 1-ஆம் தேதிக்கு முன்னா் பிறந்த குழந்தைகள் 15 ஆண்டுகள் வரை பிறப்பு உறுதிச்சான்றிதழில் பெயா்களை பதிவு செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு 2014 டிச. 31-ஆம் தேதி முடிவடைந்தது.

இதைத் தொடா்ந்து, பிறப்பு உறுதிச் சான்றிதழில் பெயா்களை பதிவுசெய்ய மேலும் 5 ஆண்டுகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. இது 2019 டிச. 31-ஆம் தேதி முடிவடைந்துள்ளது. எனவே, இந்த கால அவகாசத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு அதாவது 2026 பிப். 7-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com