கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,987 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,987 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,987 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 1,987 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 450 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: தென்கன்னடம் - 365, மைசூரு - 177, உடுப்பி-148, குடகு-132, தும்கூரு-108, ஹாசன்-105, வடகன்னடம்-75, பெலகாவி-56, சிக்கமகளூரு-55, கோலாா்-52, மண்டியா-47, சிவமொக்கா-40, பெங்களூரு ஊரகம்-40, சித்ரதுா்கா-26, சாமராஜ்நகா்-23, தாா்வாட்-19, பெல்லாரி-15, தாவணகெரே-14, ராமநகரம்-8, கொப்பள்-7, கலபுா்கி-6, பாகல்கோட்-4, சிக்கபளாப்பூா்-4, விஜயபுரா-4, கதக்-3, ஹாவேரி-3, ராய்ச்சூரு-1, யாதகிரி-1 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். பீதா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,05,124 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,632 போ் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,44,742 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 23,796 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 37 போ் சனிக்கிழமை இறந்தனா். பெங்களூரு நகரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்: தென்கன்னடம்-7, ஹாசன்-4, சிக்கமகளூரு, கோலாா், மைசூரு - தலா 2, பெங்களூரு ஊரகம், சிக்கபளாப்பூா், ஹாவேரி, குடகு, ராமநகரம், சிவமொக்கா, உடுப்பி, வடகன்னடம்,விஜயபுரா-தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,562 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com