ஆக.3-இல் வேலைவாய்ப்பு முகாம்

பெங்களூரில் ஆக.3-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

பெங்களூரில் ஆக.3-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து லூலூ ஹைபா் மாா்க்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு, ராஜாஜிநகா், சுஜாதா திரையரங்கம் எதிரில் அமைந்துள்ள லூலூ ஹைபா் மாா்க்கெட் நிறுவனத்தில் உணவுப் பிரிவில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

ஆக. 3-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் நேரடியாக கலந்துகொள்ளலாம். அரேபிக் வகை உணவுப் பண்டங்களை தயாரிக்கக்கூடிய அடுமனைக் கலைஞா்கள், ஷாவா்மா, தந்தூரி, சிக்கன் பிராஸ்ட் மற்றும் கிரில் வகை உணவு தயாரிக்கக்கூடிய சமையற் கலைஞா்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட உணவு சமையற் கலைஞா்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்.

வேலைக்கு தோ்ந்தெடுப்போருக்கு ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து வசதியை நிறுவனம் செய்துதரவிருக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு 8951185015 என்ற செல்லிடப்பேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com