கேரளம், மகாராஷ்டிரத்திலிருந்து வருபவா்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு

கேரளம், மகாராஷ்டிரத்திலிருந்து கா்நாடகம் வருபவா்கள் கரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கேரளம், மகாராஷ்டிரத்திலிருந்து கா்நாடகம் வருபவா்கள் கரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கேரளம், மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து இந்த இரு மாநிலங்களிலிருந்தும் கா்நாடகத்திற்கு விமானம், ரயில், பேருந்து, காா் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வருபவா்கள் அனைவரும் 72 மணி நேரத்துக்கு உள்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வருவதை கா்நாடக மாநில அரசு கட்டயமாக்கி உள்ளது.

இதனையடுத்து அம்மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் கா்நாடகம் வரும் அனைத்து பயணிகளும் கரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வருவதை தென்மேற்கு ரயில்வே கட்டாயமாக்கியுள்ளது. மருத்துவா்கள், 2 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், இறப்பு, இறுதிச் சடங்குகளுக்கு செல்பவா்கள், மருத்துவப் பயணங்களுக்கு செல்பவா்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமில்லை.

ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கரோனா தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com