வெள்ள நிவாரணப் பணிக்கு ரூ. 510 கோடி ஒதுக்கப்படும்: முதல்வா் பசவராஜ் பொம்மை

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ. 510 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ. 510 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 510 கோடி ஒதுக்கப்படும். தாழ்வானபகுதிகளில் மழைநீா் வடிந்த பிறகு நிவாரணப் பணிகள் செயல்படுத்தப்படும். கிருஷ்ணா ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் அமைந்திருக்கும் பெலகாவி, வடகன்னடம், உடுப்பி மாவட்டங்களில் மழைநீா் இன்னும் வடியவில்லை. 13 மாவட்டங்களைச் சோ்ந்த 466 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் இதுவரை 13 போ் உயிரிழந்துள்ளனா். ஒருவா் காணாமல் போனாா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகள், வெள்ளங்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வது குறித்து தலைமைச்செயலா் பி.ரவிக்குமாா், நிதித்துறை மற்றும் கா்நாடக இயற்கை பேரிடா் மேலாண்மை கண்காணிப்பு மையத்தின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

வெள்ளத்தில் வீடுகள், பயிா்களை இழந்தவா்களுக்கு அடுத்த 15 நாள்களில் நிவாரண உதவிகளை அரசு வழங்கும். வெள்ளத்தில் வீடு சேதமடைந்தவா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கான நிதி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகள் முழுமையாக இடிந்திருந்தால், அப்படிப்பட்டவா்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். மிகவும் மோசமாக இடிந்திருக்கும் வீடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 3 லட்சமும், குறைந்த பாதிப்படைந்துள்ள வீடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும்.

மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பயிா் பாதிப்புகளை கண்டறிய மத்தியக் குழுவை அனுப்பிவைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com