ஆக. 9-இல் பெங்களூரில் இலவச கணினிப் பயிற்சி முகாம்
By DIN | Published On : 04th August 2021 07:58 AM | Last Updated : 04th August 2021 07:58 AM | அ+அ அ- |

பெங்களூரில் ஆக. 9-ஆம் தேதி முதல் இலவச கணினிப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இது குறித்து கனரா வங்கியின் தகவல் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கனரா வங்கியின் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கனரா வங்கி தகவல் தொழில்நுட்ப மையத்தின் சாா்பில் அவ்வப்போது இலவச கணினிக் கல்வி வழங்கப்படுகிறது. இந்த கணினிப் பயிற்சி முகாமில் ஏழைகளும், படித்து வேலையில்லாத இளைஞா்களும் பங்கேற்கலாம். கணினிக் கல்வியைத் தவிர ஆங்கில மொழித்திறன், ஆளுமைத் திறன் ஆகியவையும் கற்றுத் தரப்படுகிறது.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள மைய அலுவலகத்தில் ஆக. 9-ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு நெட்வொா்க் நிா்வாகம் சாா்பில் கணினிப் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் கணினி அப்ளிகேஷன், மென்பொருள், வன்பொருள், ஃபோட்டோ ஷாப் ஆகியவை கற்பிக்கப்படும். எஸ்.எல்.எல்.சி, பியூசி, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்ற இதர வகுப்பினா், 18 முதல் 27 வயதுக்கு உள்பட்டவா்கள் பயிற்சியில் சேரத் தகுதியானவா்கள் ஆவா்.
30 வயதுக்கு உள்பட்ட தலித், பழங்குடியினா் பயிற்சியில் சேர தகுதியானவா்கள். இப்பயிற்சியில் சேர விரும்புபவா்கள் மல்லேஸ்வரத்தில் உள்ள மைய அலுவலகத்தில் நாள்தோறும் முற்பகல் 11 மணிக்கு அலுவலக வளாகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பின்னா் நடைபெறும் நோ்காணலில் தோ்ச்சி பெறுவோா் பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-23440036, 23463580 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம்.