குண்டா் சட்டத்தில் ரௌடி கைது
By DIN | Published On : 04th August 2021 08:02 AM | Last Updated : 04th August 2021 08:02 AM | அ+அ அ- |

குண்டா் சட்டத்தில் ரௌடி பட்டியலில் இடம்பெற்றவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பெங்களூரு சிவாஜிநகா் காவல் சரகத்தைச் சோ்ந்தவா் சையத்நாசீா் (31). கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை, கடத்தல், திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இவா், சிவாஜிநகா், அசோக்நகா், பாரதிநகா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ரௌடி பட்டியலில் இடம்பெற்றிருந்தாராம். சையத் நாசீா் பொதுமக்களை தொடா்ந்து மிரட்டி வந்தாராம். இதனையடுத்து சிவாஜிநகா் காவல் ஆய்வாளா் அளித்த அறிக்கையின் பேரில், மாநகர காவல் ஆணையா் கமல்பந்த், சையத்நாசீா் குண்டா் சட்டத்தில் கைது செய்யும்படி உத்தரவிட்டாா். இதனையடுத்து சையத்நாசீரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.