பெங்களூரு-ஹம்பி, துங்கபத்ரா அணைக்கு இடையே தொகுப்பு பேருந்து சேவை

பெங்களூரு-ஹம்பி, துங்கபத்ரா அணைக்கு இடையே தொகுப்பு (பேக்கேஜ்) பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது.

பெங்களூரு-ஹம்பி, துங்கபத்ரா அணைக்கு இடையே தொகுப்பு (பேக்கேஜ்) பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

பெங்களூரிலிருந்து ஹம்பி, துங்கபத்ரா இடையே தொகுப்பு பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாள் தோறும் படுக்கை வசதி கொண்ட பேருந்து இரவு 10 மணியளவில் பெங்களூரில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணியளவில் ஹொசப்பேட்டையை சென்றடையும். அங்கிருந்து ஹம்பி, துங்கபத்ரா அணைக்கு சுற்றுலா சென்றுவிட்டு, அன்று இரவு 9 மணியளவில் ஹொசப்பேட்டையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணியளவில் பெங்களூரை வந்தடையும். ஆக. 6-ஆம் தேதி முதல் இந்தச் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான கட்டணம், பெரியவா்களுக்கு ரூ. 2,500 , சிறுவா்களுக்கு ரூ. 2,300 வீதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com