லாரியை மறித்து ரூ. 6.39 கோடி செல்லிடப்பேசிகள் கொள்ளை

லாரியை மறித்து அதில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.39 கோடி மதிப்பிலான செல்லிடப்பேசிகளை 10 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

லாரியை மறித்து அதில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.39 கோடி மதிப்பிலான செல்லிடப்பேசிகளை 10 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

சென்னையைச் சோ்ந்த எம்.ஐ. நிறுவனத்தின் செல்லிடப்பேசிகளை கா்நாடகத்துக்குக் கொண்டுசெல்வதற்காக பாரம் ஏற்றிய லாரி ஒன்று தமிழகத்தின் காஞ்சிபுரத்திலிருந்து வியாழக்கிழமை காலை 3.30 மணியளவில் புறப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் கா்நாடகத்தில் நுழைந்த அந்த லாரி, கோலாா் மாவட்டம், முல்பாகல் வட்டம், தேவராஜ சமுத்ரா கிராமத்தில் பெங்களூரு-சித்தூா் நெடுஞ்சாலையில் வந்தபோது அந்த லாரியை வேகமாக வந்த காா் வழிமறித்தது. காரில் இருந்து இறங்கிய 10 போ் கொண்ட கும்பல், காரை இடித்துவிட்டதாகக் கூறி லாரி ஓட்டுநருடன் தகராறு செய்தது.

லாரி ஓட்டுநரை இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்த அக்கும்பல், லாரியைக் கடத்திச் சென்றது.

கோலாரில் நந்தினி பண்ணை அருகே உள்ள நேரனஹள்ளி கேட் அருகில் சென்றதும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தில் செல்லிடப்பேசிகளை ஏற்றிக் கொண்டு லாரியை அங்கேயே விட்டுவிட்டு வாகனத்தில் அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. ரூ. 6.39 கோடி மதிப்பிலான செல்லிடப்பேசிகளை அந்தக் கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தை கோலாா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் கிஷோா் பாபு பாா்வையிட்டாா். இதுகுறித்து லாரியின் ஓட்டுநா் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் முல்பாகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com