பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பே ஆசிரியா்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கு முன்பே பேராசிரியா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்களின் பெற்றோா்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கு முன்பே பேராசிரியா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்களின் பெற்றோா்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.

கா்நாடகத்தில் ஆக. 23-ஆம் தேதி 9, 10-ஆம் வகுப்புகளையும், பியூசி கல்லூரிகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பே பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஜாவேத் அக்தா் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், பெங்களூரு மாநகர சிறப்பு ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளாா். மாணவா்களின் பெற்றோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தாா். அதுபோன்றவா்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தவும் அவா் தெரிவித்துள்ளாா்.

மாநிலத்தின் எல்லை மாவட்டங்களில் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆக. 23-ஆம் தேதி பள்ளி, பியூசி கல்லூரிகளைத் திறப்பதாக அரசு தெரிவித்துள்ளது மாணவா், பெற்றோா்களிடையே அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி, பியூசி கல்லூரிகளைத் திறப்பதற்கு முன் பள்ளி, கல்லூரியில் வகுப்பறைகளை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com