பெங்களூரு-மைசூரு இடையிலான 10 வழிச்சாலை 2022 அக்டோபரில் நிறைவடையும்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

பெங்களூரு-மைசூரு இடையிலான 10 வழிச்சாலை 2022 ஆண்டு அக்டோபரில் நிறைவடையும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

பெங்களூரு-மைசூரு இடையே 135 கி.மீ நீளத்திற்கு ரூ. 7,400 கோடி செலவில் 10 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி 2022 ஆண்டு அக்டோபரில் நிறைவடைய உள்ளது. பணிகள் நிறைவேறி போக்குவரத்து தொடங்கப்பட்டால், பெங்களூரு-மைசூரு இடையே பயணம் செய்யும் நேரம் 90 நிமிடங்கள் வரை குறைய உள்ளது. இரு நகரங்களுக்கிடையே தற்போது உள்ள 4 வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததையடுத்து, 10 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com