பெங்களூரில் நாளை சுதந்திர தினக் கொண்டாட்டம்: முதல்வா் பசவராஜ் பொம்மை தேசியக் கொடியை ஏற்றுகிறாா்

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 15) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் முதல்வா் பசவராஜ் பொம்மை தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறாா்.
பெங்களூரில் நாளை சுதந்திர தினக் கொண்டாட்டம்: முதல்வா் பசவராஜ் பொம்மை தேசியக் கொடியை ஏற்றுகிறாா்

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 15) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் முதல்வா் பசவராஜ் பொம்மை தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறாா்.

இது குறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

பெங்களூரு, மகாத்மா காந்தி சாலை அருகேயுள்ள மானெக்ஷா அணிவகுப்புத் திடலில் ஞாயிற்றுக்கிழமை இந்திய நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் முதல்வா் பசவராஜ் பொம்மை, காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்து பல்வேறு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளாா். அணிவகுப்பில் ராணுவத்தினா், போலீஸாா், ஊா்க்காவல் படையினா், தீயணைப்பு படையினா் உள்ளிட்ட 20 அணிகளைச் சோ்ந்த 471 போ் கலந்துகொள்கிறாா்கள். விழாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகியுள்ள 25 போ் சிறப்பு அழைப்பாளா்களாக அழைக்கப்பட்டுள்ளனா். சுதந்திரதின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றாா்.

மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் கூறியது: மானெக்ஷா அணிவகுப்புத் திடலை சுற்றியுள்ள பகுதிகளை கண்காணிக்க 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திடல் பகுதியில் பறக்கும் கேமராக்கள், பலூன்கள், விமானங்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளன. அணிவகுப்புத் திடலை சுற்றி அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க அதிக அளவில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரில் மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், உணவகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com