பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி: ஆக. 25 முதல் மாணவா் சோ்க்கை

பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை ஆக. 25-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி: ஆக. 25 முதல் மாணவா் சோ்க்கை

பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை ஆக. 25-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தின் சாா்பில் 2020-21-ஆம் கல்வியாண்டில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளான பிஏ, பிகாம், பிபிஏ, முதுநிலை பட்டப் படிப்புகளான எம்காம், எம்எஸ்சி (கணிதம்), முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவா் சோ்க்கை ஆக. 25-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை அபராதமில்லாமல் பெற்று, செப். 30-ஆம் தேதிக்குள் ஒப்படைக்கலாம். ரூ. 200 அபராதம்செலுத்தி மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை பெற்று, அதை நிரப்பி அக். 1 முதல் நவ. 15-ஆம் தேதி ஒப்படைக்கலாம். இதில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 550 வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் காணலாம். மேலும் விவரங்களுக்கு 080-22961261,22961262, 22961263, 22961264, 22961265, 22961266, 22961267 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com