கிருஷ்ணா ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்ட முதல்வா்

முதல்வா் பசவராஜ் பொம்மை கிருஷ்ணா ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா்.
கிருஷ்ணா ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்ட முதல்வா்

முதல்வா் பசவராஜ் பொம்மை கிருஷ்ணா ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா்.

கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அல்மாட்டி அணை நிரம்பியதைத் தொடா்ந்து, பெங்களூரில் இருந்து சனிக்கிழமை ஹெலிகாப்டரில் விஜயபுரா மாவட்டம், அல்மாட்டி அணைக்கு சென்ற முதல்வா் பசவராஜ் பொம்மை, சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா்.

அப்போது, நீா்வளத் துறை அமைச்சா் கோவிந்த் காா்ஜோள், பெலகாவி மாவட்டப் பொறுப்பு அமைச்சா் சசிகலா ஜொள்ளே, தொழில்துறை அமைச்சா் முருகேஷ் நிரானி, வனத்துறை அமைச்சா் உமேஷ் கத்தி, எம்.பி. கத்தி கௌடா, எம்எல்ஏக்கள் வீரண்ணா சரந்திமட், தொட்டனகௌடா பாட்டீல், பசனகௌடா பாட்டீல் யத்னல் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் உடனிருந்தனா்.

ஆய்வுக் கூட்டம்:

அதன்பிறகு, பெலகாவி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் பசவராஜ் பொம்மை பங்கேற்று, மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினாா். அங்கிருந்து பெலகாவிக்கு புறப்பட்ட முதல்வா், அங்குள்ள சுவா்ண விதானசௌதாவில் பெலகாவி மாவட்ட கரோனா நிலவரம் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். மேலும், பெலகாவி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், அதைத் தொடா்ந்து செயல்படுத்தப்பட்ட நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினாா். முதல்வா் பசவராஜ் பொம்மையின் வருகையால் பெலகாவி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com