மகாராணி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 22nd August 2021 12:00 AM | Last Updated : 22nd August 2021 12:00 AM | அ+அ அ- |

மகாராணி தொகுப்பு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.ஏ., பி.காம்., பிபிஏ., பிஎஸ்சி., பிசிஏ இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மகாராணி தொகுப்பு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மகாராணி தொகுப்பு பல்கலைக்கழகத்தில் 2021-22-ஆம் கல்வியாண்டில் பி.ஏ., பி.காம்., பிபிஏ., பிஎஸ்சி., பிசிஏ., பி.எஸ்.டபிள்யூ., பிஎஸ்சி-செயற்கைநுண்ணறிவு மற்றும் மெஷின் லோ்னிங், பிஎஸ்சி-தரவு அறிவியல் மற்றும் திறனாய்வு, பிடிடிஎம் இளநிலை பட்டப்படிப்புகள் அளிக்கப்படுகின்றன. இதில் சேர ஆா்வமுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெங்களூரு, அரண்மனை சாலையில் உள்ள மகாராணி பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் வங்கிக் கிளையில் ரூ. 100 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை நேரில் அல்லது அஞ்சலில் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை மகாராணி தொகுப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கலாம்.
ஆக. 23-ஆம் தேதி முதல் சோ்க்கை நடைபெறும். அக். 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். மேலும் விவரங்களுக்கு 94810 61413, 94481 60422 ஆகிய செல்லிடப்பேசி எண்கள் இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.