கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தனி பேருந்து அட்டை

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தனி பேருந்து அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தனி பேருந்து அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கட்டுமானம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்துடன் இணைந்து வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ‘உதவிக்கரம்’ தனி பேருந்து அட்டைகளை வழங்க பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

கெம்பேகௌடா பேருந்து நிலையம், சிவாஜி நகா், யஷ்வந்த்பூா், பனசங்கரி, விஜயநகா், ஒயிட்பீல்டு, எலஹங்கா பழைய நகரம், சாந்தி நகா், தொம்ளூா், கெங்கேரி, எச்.எஸ்.ஆா்.லேஅவுட், நெலமங்களா, ஜெயநகா், கோரமங்களா, சும்மனஹள்ளி, ஹெப்பாள், ஹொசகோட்டே, கிருஷ்ணராஜபுரம் பேருந்து நிலையங்கள், தொழிலாளா் நலத்துறை அலுவலகம், வாரிய அலுவலகத்தில் தனி பேருந்து அட்டையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாரிய அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களை அளித்து தனி பேருந்து அட்டைகளை கட்டுமானத் தொழிலாளா்கள் பெறலாம். இந்த வாய்ப்பை கட்டுமானத் தொழிலாளா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு என்ற இணையதளத்தை பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com