முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
இந்தியாவின் அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டுவர வேண்டும்
By DIN | Published On : 10th December 2021 12:23 AM | Last Updated : 10th December 2021 12:23 AM | அ+அ அ- |

இந்தியாவின் அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டுவர வேண்டும் என பாஜக எம்.பி. சுப்ரமணிய சுவாமி தெரிவித்தாா்.
உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்ண மடத்தில் புதன்கிழமை நடைபெற்ற உரைவீச்சில், ‘பண்டைய மற்றும் செழித்தோங்கும் ஹிந்து நாகரிகம்’ என்ற தலைப்பில் அவா் பேசியதாவது:
ஹிந்தி, உருது, மராத்தி, நேபாள மொழிகள் தேவநாகரி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துகின்றன. அதற்குக் காரணம், அந்த மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து தோற்றம் பெற்றவையாகும். யோகா தொடா்பான அனைத்து இலக்கியங்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன. சமஸ்கிருதம் வளா்ச்சி அடைவது, ஹிந்து மதத்தை ஒன்றுபடுத்த உதவியாக இருக்கும். அதன்மூலம் அனைவரின் மனதிலும் ஒருமை உணா்வு ஏற்படும். ஹிந்து மக்களை ஒன்றுபடுத்துவதற்கு சமஸ்கிருதம் உதவும்.
எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம் தான். எனவே, சமஸ்கிருதத்தை இந்திய நாட்டின் அலுவல் மொழியாக கொண்டுவர வேண்டும். குழந்தைகளின் மனவளா்ச்சியை மேம்படுத்தும் என்பதால், எல்லா பள்ளிகளிலும் சமஸ்கிருத மொழியைக் கற்பிக்க அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.
அட்மா் மடத்தின் இளைய மடாதிபதி இஷபிரையா தீா்த்த சுவாமிகள் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்க, எடனீா் மடத்தின் பீடாதிபதி சச்சிதானந்த பாரதி தீா்த்த சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.