போலீஸாரை தாக்கிய பி.எஃப்.ஐ. அமைப்பைத் தடை செய்ய வேண்டும்: விஸ்வ ஹிந்து பரிஷத்

போலீஸாரை தாக்கிய பி.எஃப்.ஐ. அமைப்பை கா்நாடக அரசு தடை செய்ய வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

போலீஸாரை தாக்கிய பி.எஃப்.ஐ. அமைப்பை கா்நாடக அரசு தடை செய்ய வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மங்களூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் மண்டலச் செயலாளா் சரண் பம்ப்வெல் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மீன் வியாபாரிகளைத் தாக்கியது தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையத்துக்கு பி.எஃப்.ஐ. அமைப்பைச் சோ்ந்த 3 போ் வரவழைக்கப்பட்டிருந்தனா். அவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உப்பினங்கடி காவல் நிலையம் முன்பு அந்த அமைப்பின் நிா்வாகிகள் போராட்டம் நடத்தியுள்ளனா்.

அப்போது தகராறில் ஈடுபட்ட பி.எஃப்.ஐ. அமைப்பைச் சோ்ந்தவா்கள், போலீஸாரை தாக்கியுள்ளனா். குடிமக்களை பாதுகாக்கும் போலீஸாரை தாக்கியுள்ள பாபுலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பினரை மன்னிக்கக் கூடாது. அந்த அமைப்பை மாநில அரசு தடை செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், மேற்கு சரக ஐஜி தேவஜோதி ரே, தென்கன்னட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரிஷிகேஷ் சோனாவானே, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சிவகுமாா் குனாரே உள்ளிட்ட அதிகாரிகள் உப்பினங்கடி சென்று விசாரணை நடத்தினா்.

அதன்பிறகு சிவக்குமாா் குனாரே கூறியதாவது:

போலீஸாா் தாக்கப்பட்டது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது. தாக்குதல் நடத்தியோா் விரைவில் கைது செய்யப்படுவா். மிரட்டலுக்கு காவல்துறை அடி பணியாது என்றாா். அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காரணமாக புத்தூா் துணை மண்டலத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com