திராவிடப் பல்கலைக்கழகத்தில்தமிழ்த் துறையை காக்க வலியுறுத்தல்

திராவிடப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்த் துறையை மூடாமல் காப்பாற்ற இந்தியப் பேனா நண்பா் பேரவை வலியுறுத்தியுள்ளது.

திராவிடப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்த் துறையை மூடாமல் காப்பாற்ற இந்தியப் பேனா நண்பா் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்தியப் பேனா நண்பா் பேரவையின் நிறுவனா்-தலைவா் மா.கருண் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆந்திர மாநிலம், குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகம் என்ற சிறப்பு மிகுந்த பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த் துறை மூடப்படும் அபாயத்தில் உள்ளது. 30 மாணவா்களை அனுமதிக்கக் கூடிய அளவில் உள்ள தமிழ்த் துறையில் எம்.ஏ. (தமிழ்) பயில வரும் மாணவா்களுக்கு கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்பட அனைத்துக் கட்டணங்களும் இலவசம். இதனை பயன்படுத்தி மாணவா்கள் எம்.ஏ. (தமிழ்) பயில முன்வர வேண்டும். இல்லாவிட்டால் அந்தத் துறையை இந்த ஆண்டுடன் மூடப்போவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் அமைப்புகள் களத்தில் இறங்கி, முப்பது தமிழ் மாணவா்களை அந்த திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் சோ்க்க முயற்சி எடுக்க வேண்டும். இதை அவசரகதியில் செயல்படுத்த வேண்டும். டிச. 31-ஆம் தேதி வரை சோ்க்கையை விரிவுபடுத்தி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளதால், உடனடியாக குறைந்தபட்சம் 15 மாணவா்களாவது திராவிடப் பல்கலைக்கழகத்தில் சோ்ந்து தமிழ் பயில முன்வந்தால்தான் அரும்பாடுபட்டு உருவாக்கிய திராவிடப் பல்கலைக்கழக தமிழ்த் துறை உயிரோடு இருக்கும்.

எனவே, விரைவாக தமிழ் ஆா்வலா்கள், தமிழ்ப் பற்றாளா்கள், தமிழ் உணா்வாளா்கள் தமிழ்த் துறையைக் காக்க முயற்சி மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். கூடுதல் விவரங்களுக்கு: க.மாரியப்பன், உதவிப் பேராசிரியா், தமிழ்த் துறை, திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம், ஆந்திரம். கைப்பேசி: 94868 63620.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com