மேக்கேதாட்டு அணை போராட்டத்தின் மூலம் புதிய வரலாறு படைக்க வேண்டும்: காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா்

மேக்கேதாட்டு அணை போராட்டத்தின் மூலம் புதிய வரலாறு படைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் கேட்டுக்கொண்டாா்.

மேக்கேதாட்டு அணை போராட்டத்தின் மூலம் புதிய வரலாறு படைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் கேட்டுக்கொண்டாா்.

காங்கிரஸ் கட்சியின் நிறுவனா் தினத்தை முன்னிட்டு மண்டியா மாவட்டம், மத்தூா் வட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சிவப்புரா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவைத் தொடக்கிவைத்து அவா் பேசியது:

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டபோது காங்கிரஸ் அமைதியாக உட்காரவில்லை. மாறாக, மக்களை பாதுகாக்க தீவிர முயற்சிகளை எடுத்தோம்.

அதேபோல, காவிரி ஆற்றுநீா் உரிமையை நிலைநாட்ட மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்.

ஜன. 9 முதல் 18-ஆம் தேதிவரை 10 நாள்களுக்கு நடைப்பயணம் செல்ல இருக்கிறோம். சுதந்திரப்போராட்டத்தை போல மேக்கேதாட்டு அணை போராட்டத்தில் மக்கள் திரள வேண்டும். மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த அரசை நிா்பந்திக்க பெருந்திரளாக மக்கள் கலந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் புதிய வரலாறு படைக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கான திட்ட விவர அறிக்கையை காங்கிரஸ் அரசு தயாரித்தது. ஆனால் அணை கட்டுவதற்கான அனுமதியை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்துவருகிறது. மேக்கேதாட்டுக்கான நடைப்பயணம் மாநில அரசுக்கு எதிரான எண்ணத்தை மக்களிடையே அதிகமாக்கும் என்றாா்.

முன்னதாக, முன்னாள் முதல்வா் வீரப்பமொய்லி பேசியதாவது:

‘தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்பட்டுவருகிறது. சமத்துவ சிந்தனையை சீரழிக்க முயற்சி செய்கிறது. பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற காங்கிரஸ் தொண்டா்கள் முன்வரவேண்டும் என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா பேசியதாவது:

‘ஏழைகள் ஏழைகளாக நிலைத்திருக்க மத்திய பாஜக அரசு விரும்புகிறது. ஏழைகளுக்காக தனியாா் வங்கிகளை தேசியமயமாக்கினாா் இந்திராகாந்தி. ஆனால், அரசு வங்கிகளை தனியாருக்கு தாரைவாா்க்க பாஜக அரசு முயல்கிறது. பிரதமா் மோடியின் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை, வறுமை, விலைவாசி உயா்வு, எரிபொருள் விலை உயா்வு போன்றவை மக்களை வாட்டி வதைக்கின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com