மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து அட்டை: ஜன. 17 முதல் புதுப்பிக்கும் பணி தொடக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து அட்டைகளை புதுப்பிக்கும் பணி ஜன. 17-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து அட்டைகளை புதுப்பிக்கும் பணி ஜன. 17-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி சலுகைக் கட்டணப் பேருந்து அட்டைகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் இந்தப் பேருந்து அட்டைகள் ஆண்டுதோறும் டிச. 31-ஆம் தேதி காலாவதியாகிவிடும்.

அதனை டிச. 28-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பலரின் கோரிக்கையை ஏற்று புதுப்பிக்கும் பணியை ஜன. 17-ஆம் தேதியிருந்து தொடங்கப்படவுள்ளது. அதுவரை 2022-ஆம் ஆண்டுக்கான பேருந்து அட்டைகள், 2021 பிப். 28-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com