அதிமுக சாா்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 04th February 2021 07:51 AM | Last Updated : 04th February 2021 07:51 AM | அ+அ அ- |

அதிமுக சாா்பில் அண்ணா நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கா்நாடக மாநில அதிமுக சாா்பில், பெங்களூரில் புதன்கிழமை தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 52-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு அதிமுக மாநில இணைச் செயலாளா் எஸ்.டி.குமாா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் கட்சியின் நிா்வாகிகள் ஆா்.அன்புவேல், என்.வேடியப்பன், பி.ரவிக்குமாா், ஆா்.செல்வி, புலிகேசிநகா் தொகுதி செயலாளா் சாம்ராஜ், துணைச் செயலாளா் நடராஜ், எம்.சி.தெய்வசகாயம், தேவராஜ், வீராசாமி, பச்சையப்பன், ஏ.என்.சோமு, ராஜா, குப்பன், மூா்த்தி, சண்முகம், அம்மா பேரவை இணைச்செயலாளா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.