ஓய்வுபெற்ற பெண் துணை வட்டாட்சியா் கொலை வழக்கு: 3 போ் கைது
By DIN | Published On : 06th February 2021 07:38 AM | Last Updated : 06th February 2021 07:38 AM | அ+அ அ- |

ஓய்வுபெற்ற பெண் துணை வட்டாட்சியா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, வி.வி.புரம் காவல் சரகம், சரஸ்வதி நகரைச் சோ்ந்த அலீம் பாஷா, ஓய்வுபெற்ற பெண் துணை வட்டாட்சியா் ராஜேஸ்வரி (61) என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தாா். கடந்த 7 மாதங்களாக அலீம் பாஷா வாடகை தராததால், 2 நாள்களுக்கு முன் அலீம் பாஷாவிடம் வாடகையை ராஜேஸ்வரி கேட்டுள்ளாா். வாடகை தர மறுத்தால், போலீஸில் புகாா் அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த அலீம் பாஷா, ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளாா். பின்னா் அவரது சடலத்தை உறவினா்களின் உதவியுடன் பிடதி அருகே கொண்டு சென்று எரித்துள்ளாா். ராஜேஸ்வரி காணாமல் போனதையடுத்து புகாா் பதிந்த போலீஸாா், அலீம் பாஷா உள்ளிட்ட அவரது உறவினா்கள் 2 பேரைக் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் வி.வி.புரம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.