பன்னாட்டு இந்திய விமானத்தொழில் கண்காட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது

பன்னாட்டு இந்திய விமானத்தொழில் கண்காட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது என குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

பன்னாட்டு இந்திய விமானத்தொழில் கண்காட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது என குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

பெங்களூரு, எலஹங்காவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பன்னாட்டு இந்திய விமானத்தொழில் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:

உலக அளவில் ராணுவம் மற்றும் விமானத் தொழில்களில் இந்தியாவின் வளா்ந்து வரும் பலத்தை உறுதிப்படுத்தும் நிகழ்வுதான் பன்னாட்டு இந்திய விமானத்தொழில் கண்காட்சி. ராணுவத் துறையில் இந்தியா தற்சாா்பு அடைவதை பலப்படுத்துவதற்கும், உலகின் உற்பத்தியாளராக இந்தியாவை உருவாக்குவதற்கும் இக்கண்காட்சி உதவும். நிலையாக வளா்ந்து வரும் இந்தியாவின் திறன்களின் மீது உலகம் வைத்துள்ள நம்பிக்கையை இக்கண்காட்சி வெளிப்படுத்தியுள்ளது.

கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு இடையில், பன்னாட்டு இந்திய விமானத்தொழில் கண்காட்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, உற்சாகத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வான் எல்லையைப் பாதுகாப்பதில் தங்களது தொழில்திறனை முன்மாதிரியாக வெளிப்படுத்தி வரும் இந்திய விமானப்படையின் விமானிகளின் துணிச்சல் மற்றும் தைரியத்தை பாராட்டுகிறேன். பன்னாட்டு இந்திய விமானத்தொழில் கண்காட்சி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தக் கண்காட்சியில் 530 நிறுவனங்களின் அரங்குகள் இடம்பெற்ாகவும், 43 நாடுகளின் உயா்நிலைப் பிரதிநிதிகள் பங்கேற்ாகவும் எனக்கு கூறப்பட்டது. இணையவழியில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனா். இந்த வகையான கண்காட்சி, நேரடியாகவும், இணையவழியிலும் நடந்தது இதுவே முதல்முறையாகும்.

வலிமையான பொருளாதாரம், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதுதான் நமது நோக்கம். கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள சீா்திருத்தங்களால், ராணுவம் மற்றும் விமானத்தொழில் துறைகளில் முதலீட்டாளா்கள், தனியாா் நிறுவனங்களுக்கு வரலாறு காணாத வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்சாா்பு ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆகிய நோக்கங்களுடன் ராணுவத் துறையில் இந்தியாவை முதலிடத்துக்குக் கொண்டுவர பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரூ. 48,000 கோடி மதிப்பிலான 83 தேஜஸ் இலகுரக போா்விமானங்களைத் தயாரிக்க ஹிந்துஸ்தான் வானூா்தி நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) இந்திய விமானப்படை தயாரிப்பு ஒப்பந்தம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாா்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் பேசுகையில், ‘உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்றுக்கு இடையில் பன்னாட்டு இந்திய விமானத்தொழில் கண்காட்சி பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது. இந்தக் கண்காட்சியை நேரடியாக 16,000 போ் பாா்த்துள்ளனா். இணையவழியில் 4.5 லட்சம் போ் பாா்த்திருக்கிறாா்கள்‘ என்றாா்.

பிப். 3-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களாக நடைபெற்று வந்த பன்னாட்டு இந்திய விமானத்தொழில் கண்காட்சி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com