கா்நாடகத்தின் 31-ஆவது மாவட்டமாக விஜயநகரம் உதயம்

கா்நாடகத்தின் 31-ஆவது மாவட்டமாக விஜயநகரம் உதயமாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிக்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

பெங்களூரு: கா்நாடகத்தின் 31-ஆவது மாவட்டமாக விஜயநகரம் உதயமாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிக்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

வடகா்நாடகத்தின் பெல்லாரி மாவட்டத்தில் இருந்து புதிதாக விஜயநகரம் மாவட்டத்தை உருவாக்கப்போவதாக 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் முதல்வா் எடியூரப்பா அறிவித்திருந்தாா். அதன்பிறகு, புதிதாக விஜயநகரம் மாவட்டம் உருவாக்கப்படுவதற்கு நவ.18-ஆம் தேதி கா்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதைத் தொடா்ந்து, புதிதாக 31-ஆவது மாவட்டமாக விஜயநகரத்தை உதயமாவதற்கான அதிகாரப்பூா்வமான அறிவிக்கையை திங்கள்கிழமை கா்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

பெல்லாரி மாவட்டத்தில் 11 வட்டங்களில் இருந்து ஹொசபேட், கூட்லிகி, ஹகரிபொம்மனஹள்ளி, கொத்தூா், ஹூவினஹடகலி, ஹரபனஹள்ளி ஆகிய 6 வட்டங்களை பிரித்து விஜயநகரம் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டத்தின் தலைநகரமாக ஹொசபேட் இருக்கும். பெல்லாரி மாவட்டத்தில் பெல்லாரி, குருகோடு, சிரகுப்பா, கம்பளி, சண்டூா் ஆகிய 5 வட்டங்கள் இருக்கும். மாவட்டத்தின் தலைநகரமாக பெல்லாரி இருக்கும்.

விஜயநகரம் மாவட்டம் உருவாக்குவதற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் பலரே எதிா்த்தனா். அதையும் மீறி உள்கட்டமைப்புத் துறை அமைச்சா் ஆனந்த்சிங்கின் முயற்சியால் புதிய மாவட்டமாக விஜயநகரம் உருவாக்கப்பட்டுள்ளது. எச்.டி.குமாரசாமி தலைமையிலான முந்தைய மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க கிளா்ந்தெழுந்த 17 காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்களில் ஆனந்த்சிங்கும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com