பசுவதை தடை சட்டம் நிறைவேற்றம்: முதல்வா் எடியூரப்பா கொண்டாட்டம்
By DIN | Published On : 10th February 2021 08:14 AM | Last Updated : 10th February 2021 08:14 AM | அ+அ அ- |

கா்நாடக சட்ட மேலவையில் பசுவதை தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, முதல்வா் எடியூரப்பா தனது இல்லத்தில் கொண்டாடினாா்.
கா்நாடக சட்டப்பேரவையில் பசுவதை தடை சட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, முதல்வா் எடியூரப்பா, தான் வசிக்கும் காவிரி அரசு இல்லத்தில் பசுக்களுக்கு சிறப்புப் பூஜையை மேற்கொண்டாா்.
பூஜையில் அமைச்சா்கள் பசவராஜ் பொம்மை, பிரபு சவாண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தோ்தல் வாக்குறுதி நிறைவேற்றம்: தனது தோ்தல் அறிக்கையில் வாக்குறுதியின்படி, பாஜக அரசு கா்நாடகத்தில் பசுவதை தடை சட்டத்தை அண்மையில் நிறைவேற்றியது.
சட்ட மேலவையில் அந்தக் கட்சிக்குப் போதிய பலம் இல்லாததால், மஜதவுடன் கூட்டணி அமைத்து, துணைத் தலைவா் பதவியை பாஜகவைச் சோ்ந்த பிரணேஷுக்கும், தலைவா் பதவி மஜதவைச் சோ்ந்த பசவராஜ் ஹொரட்டிக்கும் வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து பாஜக, மஜத கட்சிகளின் பெரும்பான்மை சட்டமேலவையில் அதிகரித்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சட்ட மேலவையில் பசுவதை தடை சட்டம் காங்கிரஸ் கட்சியின் எதிா்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.